மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வசந்த உற்சவம் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2016 06:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவங்கியது. விழாவை முன்னிட்டு மே 20 வரை தினமும் மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புது மண்டபம் சென்று, அங்கு பக்தி உலாத்துதல், தீபாராதனை முடிந்த பின் அங்கிருந்து எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகள் சுற்றி கோயில் சேர்த்தியாகும். மே 21 காலையில் புதுமண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி, வழக்கம் போல் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேர்த்தியாகும்.
ஞானசம்பந்தர் விழா: மே 22 முதல் 24 வரை திருஞானசம்பந்தர் திருவிழா நடக்கிறது. மே 24 காலையில் திருஞானசம்பந்தர் நட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கிறது. அன்றிரவு 8.00 மணிக்க திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா புறப்பாடாகும். வைகாசி வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு கோயில் சார்பாகவோ, உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட மாட்டாது என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.