Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தானத்தில் சிறந்தது எது? தண்டாயுதபாணி- பெயர் விளக்கம்! தண்டாயுதபாணி- பெயர் விளக்கம்!
முதல் பக்கம் » துளிகள்
திருடனையும் மாற்றும் சக்தி!
எழுத்தின் அளவு:
திருடனையும் மாற்றும் சக்தி!

பதிவு செய்த நாள்

18 மே
2016
01:05

அரண்மனைக்குள் திருடன் ஒருவன் புகுந்தான். அந்தப்புரத்தை நெருங்கிய போது, ராஜாவும், ராணியும் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந் தது.மன்னா! நம் மகளுக்கு ஒரு சாதுவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். பக்திமானிடமே நம் பெண் நிம்மதியாக வாழ்வாள். அவன்  பொறுமைசாலியாக இருப்பான், என்றாள்.ராஜாவும் அதை ஒப்புக்கொண்டு, அதற்கென்ன கண்ணே! நாளையே நாம் ஆற்றங்கரைக்குச் செல்வோம்.  அங்கே தியானத்தில் இருக்கும் பல சாதுக்களில் ஒருவரைத் தேர்வு செய்வோம், என்றான்.

திருடனுக்கு பளிச்சென பொறி தட்டியது.நாமும் நாளை சாதுவைப் போல் வேடமிட்டு, ஆற்றங்கரையில் போல் தியானத்தில் இருப்பது போல் நடிப் போம். அதிர்ஷ்டம்இருந்தால், நானே ராஜாவின் மருமகன் ஆகிவிடுவேன். பிறகென்ன! தினமும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான், என  முடிவெடுத்தான்.அரண்மனையை விட்டு வெளியேறி ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டான்.மறுநாள் ராஜாவும், ராணியும் ஆற்றங்கரைக்குச்  சென்றார்கள். எல்லாத்துறவிகளும் திருமணத்துக்கு மறுத்துவிட, திருட்டுத்துறவி மட்டும் ஒப்புக்கொண்டான். அவனை பல்லக்கில் ஏறுமாறு ராஜா  சொன்னதும், திருடனின் மனதில் மாற்றம் ஏற்பட்டது.ஆஹா! துறவியாக வேடமிட்டதற்கே இவ்வளவு மரியாதை என்றால், நிஜத்துறவியாக மாறி  விட்டால், இன்னும் எவ்வளவு மரியாதை கிடைக்கும். நான் துறவியாகவே மாறி விடுகிறேன், என நினைத்தவன், நடந்ததை ராஜாவிடம் சொல்லி  மன்னிப்பு கேட்டான். திருட்டு புத்தியை மாற்றும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே இருக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar