பதிவு செய்த நாள்
21
மே
2016
02:05
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில் இரண்டாம் படை வீடாகும். முருகன் அவதரித்த தினத்தை வைகாசி விசாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். மற்ற கால வேளை பூஜைகள் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாரதனை நடந்தது. பின் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் மீண்டும் தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி கோயில் வந்து சேர்ந்தார். தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தனர். இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு வழியில் பல இடங்களில் அன்னதானம், மோர், பழரச பானங்கள், வாழை பழம் வழங்கினர். பலர் காவடி, பால்குடம் ,வேல் அலகு குத்தியும் வருகை தந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கர்கள் மொட்டை போட்டனர். பக்தர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன் இணை கமிஷனர் வரதராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.