கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில், வைகாசிப் பெருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி, தே÷ ராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது.