பதிவு செய்த நாள்
07
செப்
2011
11:09
நாமக்கல்: நாமக்கல், ரெட்டிப்பட்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காக, 10, 11 ஆகிய தேதிகளில், தீபஜோதி மஹா சண்டிகா மஹா பூஜை நடக்க உள்ளது. தல் நாள் காலை 10.30 மணிக்கு, மஹா கணபதி ஹோமம், மஹா சண்டிகா தேவி தீ ஆவாஹணம் பூஜை நடக்க உள்ளது. 12 மணிக்கு மஹா சண்டிகா தேவிக்கு உரிய மந்திர பூர்வமான விசேஷ பூஜை நடக்கிறது. மதியம் 1. 15 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ தீப ஜோதி சண்டிகா தேவிக்கு மந்திர பிரயோக விசேஷ பூஜைகள், புஷ்பாஞ்சலி, நவ கிரஹ தேவதா மஹா, மந்திர பூஜைகள் நடக்க உள்ளது. இரண்டாம் நாள் காலை 10.30 மணிக்கு, தீபஜோதி மஹா சண்டிகா பூஜையுடன், கோடியார்ச்சனை சமர்ப்பணம், சவுபாக்கய மஹாலட்சுமி தேவிக்கு, விஷேச பூஜை உள்ளிட்டவை நடக்க உள்ளது. மாலை 6 மணிக்கு, கோடி அர்ச்சனை நிறைவு பூஜைகள் செய்து, புஷ்பாஞ்சலியுடன் மஹா தீபாராதனை நடக்க உள்ளது. சங்கரய்யர் ஸ்வாமிகள் பூஜைகளை மேற்கொள்கிறார்.