பதிவு செய்த நாள்
27
மே
2016
11:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, விமரிசையாக நடந்தது. பொள்ளாச்சி வட்டாரத்தில், பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, பத்து ஆண்டுகளாக நடத்தவில்லை. சமீபத்தில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப் பட்ட திருத்தேர் வெள்ளோட்டம், கும்பாபிஷேக நாளில் விமரிசையாக நடந்தது. தேரோட்டத்துக்கான முகூர்த்தக்கால், கடந்த 9ம் தேதி நடப்பட்டது. ஒவ்வொரு நாளும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். நேற்று மாலை, 4.00 மணியளவில், கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர், 18 கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள், தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வடக்கிபாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மாலை, தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டு, கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடுதலும், 29ம் தேதி, நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடக்கின்றன. மார்க்கெட்டில் ஏலம் ரூ.900க்கு கத்திரி விற்பனை பொள்ளாச்சி ண பொள்ளாச்சி காய்கறி மொத்த மார்க்கெட்டில், ஒரு துண்டு கத்தரி, ரூ.900க்கு விற்பனை செய்யப்பட்டது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், இங்குள்ள மொத்த மார்க்கெட்டில் ஏலத்தில் விற்கப்படுகின்றன. இரு நாட்களுக்கு முன், ஒரு கூடை (14 கிலோ) தக்காளி, 850 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய ஏலத்தில், 100 ரூபாய் குறைந்து, கூடை, 750 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.