பதிவு செய்த நாள்
28
மே
2016
11:05
நொய்யல்: கரூர் மாவட்டம், நொய்யலை அடுத்த குளத்துப்பாளையம் ஏரிமேட்டில் பிரசித்தி பெற்ற ராஜமுனியப்பன், கருப்பண்ணன், கன்னிமார்சாமி, விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 25ம் தேதி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள், காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் காலை ராஜமுனியப்பன், கருப்பண்ணன், கன்னிமார்சாமி, விநாயகர் ஆகிய கோவில்களில் உள்ள கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.