தரகம்பட்டி: கரூர் மாவட்டம், வீரகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளது மாரியம்மன், பகவதியம்மன் கோவில். இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காப்பு கட்டி திருவிழா துவங்கியது. இதை முன்னிட்டு, முதல் காலம் மற்றும் இரண்டாம் கால பூஜை நடந்தது. அதன்பின், மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடந்தது. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதன்பின் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.