Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தைகளை திட்டினால் என்னாகும் ... சிந்தித்துப் பார்த்து செய்கையை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி...!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2016
04:05

நிம்மதியான வாழ்வு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய ஒரு உண்மை சம்பவத்தைக் கேளுங்கள். பால் பிரண்டன் என்ற அமெரிக்க கோடீஸ்வரர்  இந்தியா வந்தார். ஆன்மிகத்தில் உயர்நிலை பெறுவது அவரது நோக்கமாக இருந்தது. வடமாநிலங்களிலுள்ள பல ஊர்களில் பலரைச் சந்தித்தும்,  அவரது நோக்கம் நிறைவேறவில்லை. எனவே நாடு திரும்ப முடிவெடுத்தார். அவரிடம் ஒரு நண்பர், நீங்கள் தென்மாநிலங்களுக்கும் போய் வாரு ங்கள். அங்கும் கிடைக்கவில்லை என்றால் நாடு திரும்பலாம், என்றார். எழுத்தாளர் ஒருவர் மூலம், காஞ்சி மகாபெரியவரை சந்தித்தால் அவரது ÷ கள்விக்கு பதில் கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்ற பிரண்டனும் பெரியவரைத் தரிசித்தார். சுவாமி அவரிடம், உனக்கென்று ஒருவன்  திருவண்ணாமலையில் இருக்கிறான். அவனிடம் செல், என்றார். பெரியவர் குறிப்பிட்டது யார் என்று சொல்லாமலே தெரியும். அவர் தான் ரமண  மகரிஷி. பால் பிரண்டன் அங்கு சென்றார். அவர் சென்றது மாலை நேரம். மலைமேல் இருக்கும் ரமணரை அந்த நேரத்தில் பார்க்க இயலாது என்று ÷ காவிலில் தங்கினார். இரவு கொசுக்கடியில் வேதனைப்பட்டார். சரியாக துõக்கம் வரவில்லை, ஆகவே காலையில் நாடு திரும்ப வேண்டியது தான்.  இந்த கஷ்டம் தனக்கு தேவையா? என்று நினைத்தார். அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது. மகாபெரியவர் அவர் முன் தோன்றி, காலையில் நீ ரமணனை பார்த்து விட்டு செல். உனக்கு விடை கிடைக்கும், என்றார். காஞ்சியில் இருக்கும் பெரியவர் திருவண்ணாமலை வந்து இவ்வாறு  சொன்னது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மறுநாள் பிரண்டன் ரமணரை சந்தித்து அவரிடம் கேட்பதற்காக, 18 கேள்விகளை எழுதினார்.  காலையில் மலையேறும் போது, ஒரு தமிழக நண்பரிடம் தான் கேள்விகள் குறித்துவந்ததை தெரிவித்தார். இருவரும் ரமணர் அறையில் அமர்ந்தனர்.  ரமணரும் வந்தார். பக்கத்தில் உள்ள ஜன்னல் பக்கமாக பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது தமிழக நண்பர் ஆங்கிலேயரிடம் சொன்னார். நீ ங்கள் எழுந்து நில்லுங்கள். சாமி அப்போது உங்களைப் பார்ப்பார்.

அப்போது குறித்து வந்த கேள்விகளைக் கேட்கலாம், என்றார். அப்போது பால்பிரண்டன் என்ன சொன்னார் தெரியுமா, பேசாமல் இரு, என் ÷ கள்விக்கு பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது, என்று! சற்றுநேரத்தில் ரமணர் ஆங்கிலேயரைப் பார்த்தார். அவருக்கு ஒரு கப் காபி கொடுங்கள்,  என்றார். உடனே ரமணர் அங்கிருந்து கிளம்பி விட்டார். எல்லாரும் வெளியே வந்தனர். ரமணரை இன்னும் ஒருமுறை சந்திக்க விரும்பிய, பால் பி ரண்டன், ஒரு தொண்டரிடம் இதைக் கூறினார். அவரும் ரமணரிடம் அழைத்துச் சென்றார். ரமணர், பால் பிரண்டனிடம், வா மகனே வா. உனக்கு  ஒரு உபதேசம் வேண்டியிருக்கிறது. வந்த வழி திரும்பிச் செல், இதுவே உனக்கு உபதேசம்..  உத்தரவு, என்றார். உடனே தொண்டரும், பால்பி ரண்டனும் வெளியே வந்தனர் வந்த வழி திரும்பிச் செல் என்று சாமி சொன்னது எனக்கு விளங்கவில்லையே, என்றார் பால்பிரண்டன். அதன்  அர்த்தத்தை தொண்டர் கூற ஆரம்பித்தார். அதாவது, கடலில் இருந்து மேகம் புறப்பட்டு பூமிக்கு வந்து மழையாகப் பெய்து நதியாக ஓடி கடலில்  கலக்கிறது. கடலில் கலந்தவுடன் அமைதி பெறுகிறது. அதுபோல தலையில் இருந்து புறப்படும் உயிரணு தாம்பத்யம் மூலம் உடலை படைக்கிறது.  அந்த உடல் ஆசையெனும் அலையில் அகப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறது. தலை தான் கடவுள். அந்த உடலிலுள்ள ஆத்மா எப்போது கடவுள்  என்னும் தலைக்கு மீண்டும் வந்து சேருகிறதோ, அப்போது தான் மனிதனுக்கு நிம்மதியும், அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும் என்பது தான் நீ  வந்த வழி திரும்பிச் செல் என்பதன் விளக்கம். அதுவே தியானமும் ஆகும், என்றார். பால் பிரண்டணும் அங்கேயே சில நாட்கள் தங்கி தியான  முறை அறிந்து, உயர்நிலையாகிய தவயோக நிலை பெற்றார் என்பது வரலாறு. (மகான் ரமண மகரிஷி)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar