Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி...! பக்தையின் பெயரில் மரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2016
04:05

*சுயமாக சிந்தித்து மனிதன் அறிவுவழியில் வாழ்வு நடத்த வேண்டும். சுயஅறிவு படைத்தவனால் மட்டுமே, தவறுகள் உருவாகிற போதே திருத்திக்  கொண்டு வாழ்வில் உயர்வடைய முடியும்.
*வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் உயர்ந்த லட்சியம் வேண்டும். லட்சியம் இல்லாதவன் மனிதனாக மாட்டான். லட்சியத்தை நோக்கி எப்÷ பாதும் கனவு காண வேண்டும். அதை சாதிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*வாழ்வில் பிடிப்பற்ற தன்மை, சலிப்பு, திருப்தியின்மை போன்ற உணர்வுகளால் மனிதர்கள் அல்லல்படுகின்றனர். ஆனால் லட்சியவாதிகளிடம்  இத்தகைய உணர்வு வெளிப்படுவதில்லை.
*மனிதன் நேர்மையாக வாழ வேண்டும். செல்வந்தன், அறிவாளி, தர்மவான் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு சமுதாயத்தில்  மற்றவர்களை ஏமாற்ற முயலக்கூடாது.
*மனிதர்கள் அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாகவும், தனித்தன்மை  கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
*மனிதர்களுக்குள் தனித்தன்மை என்பதற்கு தோலின் நிறம், உடல் அமைப்பு ஆகிய வெளித் தோற்றத்தை மட்டும் கருதுவது கூடாது. ஆளுமைப்  பண்பில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இருக்கிறது.
*முயற்சி ஒரு போதும் வீணாவதில்லை. எவ்வளவு சிறிய முயற்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன் ஒருநாள் கிடைத்தே தீரும்.
*போட்டியில் வெல்வதையே வெற்றி என்று கருதுகிறார்கள். ஆனால், போட்டி மனப்பான்மையே மனிதர்களுக்கிடையே பிரச்னை உருவாவதற்கு  காரணமாக இருக்கிறது.
*தற்காலத்தில் பணம் மட்டுமே வெற்றியின் அளவுகோலாக இருக்கிறது. செல்வம், புகழ், பதவியில் இருப்பவர்களை வெற்றியாளர்கள் என கரு துகிறார்கள். அவர்களின் மனதிற்குள் வெறுமையுடன் வாழ்கிறார்கள் என்பதை பலரும் அறிவதில்லை.
*மனதிருப்தி கொண்டவர்கள், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து
மகிழ்பவர்கள், வாழ்க்கையின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் ஆகியோரே
வெற்றிகரமான வாழ்க்கை நடத்துவதாக மனவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
*உலகின் எந்த இடத்தில் இருந்தாலும், என்ன பணியில் ஈடுபட்டாலும் அதை பெருமைக்குரியதாக மனிதன் கருத வேண்டும். இதுவே  வெற்றிகரமான வாழ்வின் முதல் அடையாளம்.
*மிருகத்தனம், மனிதத்தன்மை, தெய்வீகம் ஆகிய மூன்று பண்புகள் மனிதனுக்குள் இருக்கின்றன. இதில் தெய்வீகத்தை வளர்க்க வேண்டும். மிரு கத்தனத்தை விட வேண்டும்.
*எந்த வேலையையும் அலட்சியமாக கருதுவது கூடாது. வேலை சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும் விழிப்புடன் ஈடுபட வேண்டும்.  பணியின் மூலம் மன நிறைவும், இன்பமும் காணும் விதத்தில் செயல்பட வேண்டும்.
*தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், பிறருக்கு கூழைக்கும்பிடு போடுவதும் பணிவு ஆகாது. தன்மான உணர்வுடன் பலம், பலவீனத்தை அறிந்து  கொண்டு அதற்கேற்ப வாழ்வதே உண்மையான பணிவின் இலக்கணம்.
*கிருமிகள் உடம்பில் நுழைந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி அதை விரட்ட முயலும். அதுபோல, வெற்றி மனப்பான்மை கொண்டவர்கள் பி ரச்னைக்கான சூழ்நிலையை விரட்டியடித்து எப்போதும் மனதை சீராக வைத்துக் கொள்வர். (மகான் பஜனானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar