வனதுர்க்கை மகிஷாசுரமர்த்தினி கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2016 12:05
பழநி: பழநி மலைக்கோயில் கிரிவீதியிலுள்ள வனதுர்க்கையம்மன், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்களில் மண்டலகால சிறப்பு யாக பூஜை நடந்தது. பழநி மலைக்கோயில் தெற்குகிரிவீதியிலுள்ள ஸ்ரீவனதுர்க்கையம்மன், மேற்குகிரிவீதி ஸ்ரீமகிஷாசுர மர்த்தினிஅம்மன் கோயில்களில் கடந்த ஏப்.,11ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் மண்டல சிறப்புபூஜைகள் நடந்துவந்தது. நேற்று 48ம் நாள் மண்டல பூஜை நிவர்த்தியை முன்னிட்டு இரண்டு கோயில்களிலும் பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய சிவாச்சாரியர் தலைமையிலான குழுவினர் விநாயகர்பூஜை, நவ கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜையுடன், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.