பதிவு செய்த நாள்
31
மே
2016
12:05
மயிலாடுதுறை: திருவெண்காடு கோவிலில், அகோரமூர்த்தி சன்னிதியில், ருத்திராட்ஷ பந்தல் அமைக்கப்பட்டது. நாகை மாவட்டம், திருவெண்காட்டில், சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. புதன் ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில், அகோரமூர்த்திக்கு தனி சன்னிதி உள்ளது. இங்குள்ள அகோரமூர்த்தி சன்னிதியில், எட்டு பைரவர்கள் இருப்பது மிக விசேஷமாகும். இவரை வழிபட்டால், சத்ரு உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம். அகோரமூர்த்தி சன்னிதிக்காக, 10,008 ருத்திராட்ஷங்கள் கொண்டு, பந்தல் தயாரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், அகோரமூர்த்தி சன்னிதியில், ருத்திராட்ஷ பந்தல் அமைக்கப்பட்டது. ருத்திராட்ஷத்தால், பந்தல் அமைத்தால், சன்னிதி குளிர்ச்சியாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.