மதுரை வீரன்சாமி கோவிலில் பேய் விரட்டும் ஐதீக நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2016 11:06
நொய்யல்: கரூர் அருகிலுள்ள சேமங்கி செல்வநகரிலுள்ள மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவிலில், வைகாசி திருவிழா கோலாகலமாக நடந்தது. நேற்றுமுன்தினம் காவிரியாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். சுவாமிக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூசாரி அரிவாள் மீது ஏறி நின்றபடி பேய், பிசாசு, பாதிக்கப்பட்ட பெண்களை சாட்டையால் அடித்து அருள்வாக்கு கூறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.