பதிவு செய்த நாள்
01
ஜூன்
2016
11:06
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, மே, 8ம் தேதி துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. கம்பம் சாட்டுதல், பூச்சொரிதல், காப்புக்கட்டுதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னிசட்டி ஏந்தி, பக்தர்கள் தங்கள் பிரர்த்தனையை நிறைவேற்றினர். அமராவதி ஆற்றுக்கு கம்பம் எடுத்துச் செல்லுதல், தேரோட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில், நேற்று பின்னமர வாகனத்திலும், இன்று, புஷ்ப அலங்காரத்திலும், வரும், 3ம் தேதி புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, வரும், 5ம் தேதி அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.