மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி இடம் தானம் பெற பிரம்மச்சாரியாக வந்த வாமனர், திரிவிக்ரமனாக உயர்ந்து நின்று ஒருகாலால் விண்ணுலகத்தையே அளந்தார். அப்போது சத்தியலோகத்தில் இருந்த பிரம்மா, புனிதநீரால் பாதத்திற்கு அபிஷேகம் செய்தார். அந்த அபிஷேக நீர் வானுலகில் மந்தாகினி என்னும் நதியாக ஓட ஆரம்பித்தது.ஆனால், ஆதிசங்கரர், ஸ்ரீபதி பாதார விந்தேதிவ்யதுநீ மகரந்தே என்று குறிப்பிடுகிறார். இதற்கு காஞ்சிப்பெரியவர், பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்து அபிஷேகம் செய்த நீர் ஆறாக ஓடவில்லை.பெருமாளின் தாமரைப் பாதத்தில் இ ருந்துவழிந்த தேனே இப்படி ஆறாக ஓடுகிறது என விளக்கம் அளிக்கிறார். கங்கை நதிக்கு மூவுலகிலும் வெவ்வேறு பெயருண்டு. விண்ணுலகில் மந்தாகினி, பூலோகத்தில் பாகீரதி, பாதாள உலகில் போகவதி என்று பெயர்.