சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் புதிய சித்திர தேர் வெள்ளோட்ட திருவிழா நேற்று நடந்தது. இக்கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடக்கும். 16வது நாள் தேரோட்ட திருவிழா நடக்கும். இதற்காக புதிய தேர் ரூ.27 லட்சத்தில் உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. திருப்பணி குழுதலைவர் சுப்பிரமணியம், எம்.எல்.ஏ., மாணிக்கம், தாசில்தார் திருமலை, டிரஸ்ட் நிர்வாகி சின்னப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.