பதிவு செய்த நாள்
04
ஜூன்
2016
12:06
குளித்தலை: புதுக்கல்லுப்பட்டி தீப்பாஞ்சாயி அம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த புதுக்கல்லுப்பட்டியில், கற்பகவிநாயகர், மாசிபெரியண்ணசாமி, கருப்பண்ணசாமி, கன்னிமார், மந்திரமகாமுனி, நாகம்மாள் மற்றும் தீப்பஞ்சாயி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் செய்தனர். முன்னதாக, குளித்தலை காவிரி
ஆற்றிலிருந்து தீர்த்தத்துடன் முளைப்பாரி எடுத்துவந்து அனுக்ஞை விநாயகர் பூஜை, தனபூஜை, வாஸ்துசாந்தி, கடஸ்தாபனம், யாகசாலை பிரவேஷம் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, ஜூன்.,3 ம்தேதி முன்தினம் தீப்பஞ்சாயிஅம்மன் கோபுரத்தின் கலசத்திற்கு மூல ஸ்தாபனம் மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்ட போது பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் வனங்கினர். பின்னர் தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் வழங்குதல் நடந்தது. இவ்விழாவில் தோகைமலை, குளித்தலை, மணப்பாறை, திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.