Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்வம், துளசி சிறப்பு! திருவாதிரை என்ற சொல்லின் பொருள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதுவே வெற்றியின் ரகசியம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
02:06

கல்வி நிறுவனங்கள் திறந்துள்ள நிலையில் இந்த அறிவுரையை மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள் மாணவர்களே!

*மன ஒருமைப்பாடே வெற்றியின் ரகசியம். இதை அறிந்தவர்களே புத்திசாலி மாணவர்கள். படிக்கும் அனைவரும் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் முழு கவனம் செலுத்துவது அவசியம்.
*இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் கொல்லர் சிறிது கவனம் தவறினாலும் கையில் பட்டு விடும். கொல்லர்கள் மட்டுமல்ல... தச்சர், நெசவாளர், நாவிதர்,
எழுத்தாளர் என எந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் அவர்களது மனநிலையை எப்படி ஒருமைப்படுத்தி வைத்துள்ளனரோ, அதே ஒருமை நிலையை மாணவர்களும் ஏற்க வேண்டும்.
*புத்தகத்தைப் படித்தோ, சொற்பொழிவைக் கேட்டோ யாரும் மன ஒருமைப்பாடு பெற முடியாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஆழ்ந்த ஈடுபாடும், கவனமும் கொண்டால் தான் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
*அர்ஜூனன், “மனதை கட்டுக்குள் வைப்பது என்பது காற்றைக் கையில் பிடிப்பதற்குச் சமமானதாக இருக்கிறதே” என்று கிருஷ்ணரிடம் கேட்கிறான். அதுபோல் அலைபாயும் மனதை உங்கள் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
*விடாமுயற்சியும், பயிற்சியும் இருந்தால் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று கீதையில் கிருஷ்ணர் தெளிவுபடுத்தியுள்ளார்.
*புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாது என ஒருபோதும் எண்ணுவது கூடாது. கடினமான பாடங்களைக் கூட கற்க முடியும் என்ற தன்னம்பிக்கைஉடன் படித்தால் சாதனை படைக்க முடியும்.
*இஷ்டம் போல் வாழ்ந்தால் என்ன என்றும், மனதை ஏன் கட்டுப்படுத்தி சிரமப்பட வேண்டும் என்று மாணவர்களில் சிலருக்கு அடிக்கடி சந்தேகம் எழுவதுண்டு. இந்த நிலையை வளர்த்துக் கொண்டால், சாதாரண செயலை நிறைவேற்றக் கூட போராட வேண்டியிருக்கும்.
*மனக்கட்டுபாடு வந்து விட்டால் அரிய செயலைக் கூட எளிதாக நிறைவேற்ற முடியும்.
*மனதைக் கட்டுப்படுத்த விரும்புவோர் எண்ணங்களைச் சிதறடிக்கும் சூழ்நிலைகளை அறவே தவிர்க்க வேண்டும். புத்தியின் உதவியுடன் மனதை ஒரு பணியாளராக வழி நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
*ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் சுடர்விட்டு பிரகாசிக்கும் விளக்கு போன்றது. விளக்கு இருளை கிழித்து எங்கும் ஒளியைப் பரப்புவது போல, ஒருமுகப்பட்ட மனமும் தெளிவாக சிந்தித்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இருக்கும்.
*புத்தகத்தை வாசிப்பதால் மேலோட்டமான கருத்தை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். பாடத்தை ஆழ்ந்து படித்தால் மட்டுமே அதை மனதில் நிறுத்தி தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
*சிறந்த மாணவராக திகழ வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்வியாண்டின் முதல்நாளில் இருந்தே படித்தால் இயல்பாக மன ஒருமைப்பாடு உண்டாகும். (மகான் புருஷோத்தமானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar