பதிவு செய்த நாள்
08
ஜூன்
2016
11:06
எருமப்பட்டி: கூலிப்பட்டியில், மூன்று ஆண்டுகளுக்கு பின், கனக மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடைபெற உள்ளது.
சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியில், கனக மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று, காலை மாவிளக்கு படைத்து, அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று, பொங்கல் வைத்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 9ம் தேதி, கனக மாரியம்மன் ஊஞ்சலில் காட்சி அளிக்கிறார். மாலை, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் நகர்வலம் வந்து, மஞ்சள் நீராட்டு விழாவுடன், கம்பம் குடிவிடும் நிகழ்ச்சி நடக்கிறது.