கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா, அளுக்குளி அருகே, மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. அம்மனுக்கு நேற்று காலை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், அளுக்குளி மற்றும் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். விரதமிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மேலதாளம் முழங்க, தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு, பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதனால், கலைஞர் நகர் முழுக்க விழாக்கோலம் பூண்டிருந்தது.