பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
12:06
தொடுகாடு: தொடுகாடு, திருவேங்கடமுடையான் பஜனை கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு கிராமத்தில் உள்ளது திருவேங்கட முடையான் பஜனை கோவில். இங்கு, மகா கும்பாபிஷேகம், இன்று காலை, நடைபெற உள்ளது. முன்னதாக, நேற்று காலை 6:00 மணிக்கு. கணபதி ஹோமமும், மாலை 6:00 மணி முதல் கிராம தேவதை வழிபாடும், வாஸ்து சாந்தி, கடஸ்தாபனம் மற்றும் யாகசாலை பூஜைகளும் நடந்தன. பிAன், இன்று காலை 5:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து, காலை 7:30 மணி முதல், 8:30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில், சுவாமி வீதியுலா நடைபெறும்.