ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பொம்மையசுவாமி, பல்லகுண்டம்மாள் கோயில் இரட்டை கோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாள் நிகழ்ச்சியில் முதல் நாளில் தெற்கு பெரியகோயிலில் இருந்து, ராஜகம்பளத்து நாயக்கரின் தேவராட்டத்துடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அவர்கள் சமுதாய வழக்கப்படி, விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மந்திரங்கள் சொல்லி புனித நீரை கும்பத்தில் ஊற்றி, இரட்டை கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது.