உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மாலைப்பட்டியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொட்டப்பநாயக்கனுார் ஜமீன்தார் பாண்டியர் தலைமை வகித்தார். மாலைப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர். நேற்று காலை 4.00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. காலை 6.00 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.