விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகர் அபிநவ மந்த்ராலயா ராகவேந்திரர் கோவிலில் வர்தந்தி உற்சவம் மற்றும் அரச மரம், வேப்ப மரத்திற்கு திருக்கல்யாண விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அரச மற்றும் வேப்ப மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஹரி பஜன், மகா தீபாரதனை ஸ்வஸ்தி நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.