பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
11:06
ஊத்துக்கோட்டை: பத்து நாட்கள் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று கருட வாகனத்தில், கோதண்டராம சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ள, சீதா லட்சுமண அனுமத் சமேதர கோதண்டராம சுவாமி கோவில் பழமையானது. இக்கோவிலில், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. முதல் நாள் காலை, 9:00 மணி துவஜ÷ ராகனம் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள், காலை, 8:00 மணிக்கு உற்சவர் ஹம்ச வாகனத்திலும், இரவு, 8:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் கோதண்டராம சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். இரவு, 8:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று, 11ம் தேதி காலை, 8:00 மணிக்கு சூரியபிரபை வாகனத்திலும், இரவு, 7:00 மணிக்கு சேஷவாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.