பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
11:06
கோவை: சிவானந்தாகாலனி சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் உற்சவத்திருவிழா நிறைவு நாளான நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிவானந்தாகாலனி, சங்கனுார், கண்ணுசாமி வீதியில் உள்ள, சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் இரண்டாமாண்டு உற்சவத்திருவிழா, மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 3ல், திருவிளக்கு வழிபாடும், 7ம் தேதி, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று காலை, மகா அபிஷேகத்தை தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்; மாலை மறுபூஜையுடன் உற்சவத்திருவிழா நிறைவடைந்தது.