பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
11:06
திருப்பூர்: முதலிபாளையம் அடுத்த கெங்கநாயக்கன்பாளையம், முத்து நகரில் உள்ள வேட்டைக்காரன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, 7ல் துவங்கியது. கொடுமுடியில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து, சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் பூஜையை தொடர்ந்து, கன்னிய õத்தாவுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. மதியம் படைக்கலம் எடுத்து வரப்பட்டு, வேட்டைக்காரன், கன்னிமாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. இரவு அம்மை அழைத்தல் பூஜையை தொடர்ந்து நள்ளிரவு, 12:00 மணிக்கு பெரிய பூஜை நடைபெற்றது. வேட்டைக்காரன், முனியப் பனுக்கு பூ பொங்கல் படைத்து சிறப்பு பூஜை நடந்தது. நல்லுõர், காசிபாளையம், கூலிபாளையம், பிச்சம்பாளையம், மாணிக்காரபுரம், சிட்கோ பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். கிடாய் வெட்டை தொடர்ந்து, அதிகாலையில் அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று ÷ வட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.