ரிஷிவந்தியம்: பாசார் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த பாசார் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. கடந்த 8 ம் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 11ம் நாளான நேற்று மதியம் 2:30 மணிக்கு, சக்தி அழைத்தல், தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து சாகைவார்த் தல் மற்றும் தேர் திருவிழா நடந்தது.