வாலாஜாபாத்: சந்திரமவுலீஸ்வரர் கோவில், கட்டுமான பணிக்காக நேற்று பாலாலயம் நடந்தது. படுநெல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டுமான பணிக்காக, நேற்று காலை, 8:00 மணிக்கு, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், படுநெல்லி கிராமத்தை சுற்றியுள்ள கிராமவாசிகள் கலந்து கொண்டனர். கோவிலில் கும்பாபிஷேகம் முடியும் வரை, பெரிய அளவில் வழிபாடு, பூஜைகள் நடைபெறாது. கோவில் சிலைகளுக்கு தனியிடத்தில் பூஜைகள் நடைபெறும்.