ஆத்தூர் மாரியம்மன் கோவில் விழா அலகு குத்தி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2016 11:06
ஆத்தூர்: ஆத்தூர், காந்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆத்தூர் காந்தி நகர் பகுதியில், பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று, ஆண்கள், பெண்கள், தீச்சட்டி எடுத்து வந்தும், விமான அலகு உள்ளிட்ட அலகுகள் குத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். விழாவில், முத்து மாரியம்மன் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.