ஐந்து சிவலாயங்களுக்கும் ஒரேநாளில் சென்று வழிபடுவது சிறப்பாகும். கார்த்திகை மாத சோமவாரங்களில் இங்கு சென்று வரலாம். ஐந்து சோமவாரங்கள் வரும் ஆண்டுகளில், கடைசி சோமவாரத்தன்று விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இணைந்து வருமானால், அந்த ஆண்டில் சப்தாஹ உற்ஸவம் என்னும் ஏழுநாள் விழா நடக்கும். 1979, 86,93, 2006,2009ம் ஆண்டுகளில் சப்தாஹவிழா நடந்தது. இந்த அபூர்வ விழா மீண்டும் வரும் ஆண்டுகளில், காவிரியில் நீராடி விரதமிருந்து ஐந்து கோயில்களுக்கும் சென்று வணங்கினால், எல்லா நலன்களும் இப்பிறவியிலேயே உண்டாகும்.