புதுச்சேரி: கோவிந்த சாலையில் உள்ள கோவில் திருப்பணிக்கு, சிவா எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார். கோவிந்த சாலையில் ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 16 ம் தேதி நடைபெற உள்ளது. இக்கோவில் திருப்பணிக்கு உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., சிவா கோவில் நிர்வாகிகளிடம், தனது சொந்த செலவில் 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். ஆலய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.