ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விழாவில், இன்று (ஜூன் 14) தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, பெருமுடிவாக்கம், சீதா லட்சுமண அனுமத் சமேதரான கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த, 8ம் தேதி துவங்கிய விழாவில், உற்சவர் ஒவ்வொரு நாளும், பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று (ஜூன் 14) காலை, 7:30 மணி நடைபெற உள்ளது. இரவு, 8:00 மணி உற்சவர் சர்வபூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் நிறைவு நாளான வரும், 17ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.