பதிவு செய்த நாள்
14
ஜூன்
2016
11:06
திருப்பூர்: பூமலூர் புனித அந்தோணியார் சர்ச், தேர்த்திருவிழா, 18, 19ல் நடைபெறுகிறது. திருப்பூர் அருகே உள்ள பூமலூரில், நூற்றாண்டு பழமைவாய்ந்த, புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இந்த ஆலயத்தின், ஆண்டு தேர்த்திருவிழா, இன்று காலை, 7:30 மணிக்கு, கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தனிஸ் தலைமையில், கொடியேற்றம் மற்றும் கூட்டுப்பாடல் திருப்பலியுடன் துவங்குகிறது. வரும், 18ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது; தொடர்ந்து, மின் அலங்கார ஆடம்பர தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடக்கிறது. 19ம் தேதி காலை, 6:30 மணிக்கு திருப்பலி; 8:00 மணிக்கு, கருமத்தம்பட்டி வட்டார முதன்மை குரு ஜெயரோம் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, வேண்டுதல் தேர்; காலை, 11:00 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டம், ஜீசஸ் கான்வென்ட் நிறுவனர் அருள் இதயம் தலைமையில், கூட்டு திருப்பலி, மறையுரை நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு, மதில் சுவர் சுற்றி தேர் பவனி, பாடற் திருப்பலி நடைபெற உள்ளது.