பரமக்குடி: காட்டுப்பரமக்குடி துாயபதுவை அந்தோணியார் சர்ச்சில் தேர் பவனி விழா நடந்தது. கடந்த ஜூன் 11ல் மாலை 6 மணிக்கு சர்ச் வளாகத்தில் சிறப்பு திருப்பலி, வழிபாடு நடந்தது. பரமக்குடி பங்குத்தந்தை செயஸ்தியான் தலைமையில், திருச்சி அமல ஆசிரமம், ஆசிரியர் சபைக்குரு பிரிட்டோ, லண்டன் கிளெரிசியன் சபைக்குரு அந்தோணி ஆகியோர் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் துாயபதுவை அந்தோணியார் தேர்ப்பவனி காட்டுப்பரமக்குடி முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.