வனப்பேச்சியம்மன் கோயிலில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரியவகை பிள்ளை மருது மரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2016 11:06
சாயல்குடி: கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட தனியங்கூட்டம் வனப்பேச்சியம்மன் கோயில் வளாகத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அரியவகை பிள்ளை மருது மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் இலைகள், சிகப்பு நிற காய்கள் காரத் தன்மையுடன் ருசியானதும், மருத்துவ குணங்கள் கொண்டதும் ஆகும். கோடைகாலத்தில் மரத்தின் அடியில் அமர்ந்தால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரும் வல்லமை கொண்டது. பிள்ளை மருது மரத்தின் மகத்துவம் குறித்து கோயில் அர்ச்சகர் சண்முகசுந்தரம் கூறுகையில், “கடலாடி, சாயல்குடி பகுதிகளை தவிர இவ்வகை மரங்கள் ராமநாதபுரத்தில் வேறு எங்கும் கிடையாது. மிகவும் பழமைவாய்ந்த இந்த மரத்தின் இலைகள், சிறிய அளவிலான பழங்களை நன்கு நீர் ஊற்றி அரைத்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறோம். மருத்துவ குணம் கொண்ட இதனை இறைநம்பிக்கையுடன் உட்கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. வறட்சி காலங்களிலும் செழித்து வளர்ந்து குளிர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் படைத்தது,” என்றார்.