புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 14ம் ஆண்டு கும்பாபிஷேக விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 14ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, 108 கலச அபிஷேக விழா வரும் 19ம் தேதி காலை 8:00 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்குகிறது. காலை 9:00 மணிக்கு ஷோடச கணபதி பூஜை, 1008 கணபதி ஹோமமும், மாலை 4:15 மணிக்கு கலச பிரதிஷ்டை, முதல் கால யாகவேள்வி நடக்கிறது. தொடர்ந்து, முக்கிய விழாவாக வரும் 21ம் தேதி காலை 5:00 மணிக்கு காகட ஆரத்தி, 6:00 மணிக்கு ஸப்தகுரு பூஜை, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு, 9:30 மணிக்கு கலசாபிஷேகம், பகல் 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7:30 மணிக்கு சாவடி உற்சவம், நாட்டியாஞ்சலி நடக்கிறது.