பலத்த காற்றால் பழநியில்ரோப்கார் சேவை பாதிப்பு: ஒரு மாதம் நிறுத்த திட்டம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2016 11:06
பழநி:பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் மலைக்கோயில் ரோப்கார் சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. பழநி ரோப்கார் காலை 7 மணி -இரவு 9 மணி வரை இயங்குகிறது. பகல் 1.30 மணி - 2.30 மணிவரை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும். தென்மேற்கு பருவமழை துவங்கியதையொட்டி, சில நாட்களாக பழநியில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் ஏமாற்றம் அடை கின்றனர். நேற்று பலத்த காற்று காரணமாக காலை 10 மணி முதல் 12 மணிவரை நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த நேரத்தில் மீண்டும் இயக்கப்பட்டது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ரோப்கார் பெட்டிகள் கம்பி வடத்தில் இயங்குவதால் அதிக காற்றுவீசும்போது அதிர்வு ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது. எனவே, 40 கி.மீ.,க்கு மேல் காற்றுவீசும் போது ஆப்பரேட்டருக்கு சிக்னல் கிடைத்தவுடன் ரோப்கார் சேவை நிறுத்தப்படும். காற்றின்வேகம் குறைந்த நேரத்தில் வழக்கம் போல் இயக்கப் படுகிறது. ஓரிரு நாட்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காகவும், அதன்பின் ஆண்டு பராமரிப்பு பணிக்காகவும் ஒரு மாதம் வரை ரோப்கார் நிறுத்தப்பட உள்ளது,” என்றார்.