Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் தியாராஜர் கோவிலில் ... பலத்த காற்றால் பழநியில்ரோப்கார் சேவை பாதிப்பு: ஒரு மாதம் நிறுத்த திட்டம்! பலத்த காற்றால் பழநியில்ரோப்கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துபந்தல் விழா
எழுத்தின் அளவு:
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துபந்தல் விழா

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2016
11:06

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் எழுந்தருளிய முத்துபந்தல் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கோவில் பாடல் பெற்ற தலம். காமதேனுவின் 4 பெண்களுள் பட்டி என்பவள் தேனுபுரீஸ்வரரை நாள்தோறும் பூஜித்து முக்தி பெற்றதால் இத்தலத்திற்கு பட்டீஸ்வரம் என பெயர் வந்தது. இக்கோவிலில் ஆனி மாதத்தில் முத்துபந்தல் விழா நடைபெறும். கடந்த, ஐந்து ஆண்டுகள் வரை கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்றதால் முத்துபந்தல் விழா நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி, 29ம் தேதி, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முத்துபந்தல் விழா கடந்த, 13ம் தேதி துவங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று, திருஞானசம்பந்தர், தேனுபுரீஸ்வரர் வழங்கி அருளிய முத்துபந்தலில் காட்சி அளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 30 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள முத்து பல்லக்கினை சுமந்துகொண்டு சென்றனர். வழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நின்று வழிப்பட்டனர். இரவு 8 மணிக்கு, முத்து விமானத்தில் தேனுபுரீஸ்வரர் காட்சியளித்தலும், திருஞானசம்பந்த மூர்த்தி முத்துபந்தலில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar