பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
11:06
மல்லசமுத்திரம்: பள்ளக்குழி அக்ரஹாரத்தில் நேற்று காலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, பள்ளக்குழி அக்ரஹாரம் கரட்டுவலவில், மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 14ம்தேதி, இரவு, 10 மணிக்கு, கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு, காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வர புறப்பட்டனர். மாலை, 6 மணிக்கு, விநாயகர் வழிபாடு, சங்கல்பம், வாஸ்து பூஜை, கங்கனம் கட்டுதல், முதற்கால யாகபூஜை, கண்திறப்பு, கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 5.45 மணியளவில், இரண்டாம் கால யாகபூஜை ஆரம்பமானது. காலை, 9.30 மணியளவில், கோபுர கும்பாபிஷேகம் நடந்தது.