சின்னாளபட்டி சவுந்தர விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2016 11:06
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பூஞ்சோலையில், ஜீவாநகர் சவுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ யாகசாலை பூஜைகளுடன், கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. சுற்றுபுற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.