பதிவு செய்த நாள்
18
ஜூன்
2016
10:06
புதுச்சேரி: பிரத்தியங்கிரா காளி கோவிலில் 19ம் ஆண்டு குருபூஜை மற்றும் 108 துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நேற்று நடந்தது. புதுச்சேரி அருகே மொரட்டாண்டியில் பிரத்தியங்கிரா காளி கோவிலில், நடாதுார் நம்பி சுவாமிகளின் 19ம் ஆண்டு குருபூஜை மற்றும் 108 துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 6.00 மணி முதல் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், ருத்ர ஜபம், ஸ்ரீ சூக்தங்கள் பாராயணமும், நடாதுார் நம்பி சுவாமிகள் மூல மந்திர சகித, பிரத்தியங்கிரா, ஸ்ரீசூலினி சமேத ஸ்ரீசரபேஸ்வர மகா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, நடாதுார் நம்பி சுவாமிகளுக்கு 108 கலச அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது. 19ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, குருபூஜை மற்றும் 108 துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை, நடாதுார் ஜனார்த்தன சுவாமிகள் செய்திருந்தார்.