வெள்ளியணை: வெள்ளியணையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், வெள்ளியணை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், கடந்த, 7ம் தேதி கொடியேற்ற விழா நடந்தது. தினமும், யானை வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், ஹனுமந்த வாகனம், ஹம்ச வாகனம் என்று பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. நேற்றுமுன்தினம் காலை ஜெகதாபி பெருமாள் கோவிலுக்கு பல்லக்கில் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. இதில், வெள்ளியணை, ஜெகதாபி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெருமாள் பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கோவில் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.