பதிவு செய்த நாள்
18
ஜூன்
2016
12:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூன் 18), 29ம் ஆண்டு பிரதிஷ்டை தின உற்சவம் நடக்கிறது. கிருஷ்ணகிரிசேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று, 29 ம் ஆண்டு பிரதிஷ்டை தின உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை, 5.45 மணிக்கு, கேரளா பிரம்ம ஸ்ரீ புத்தில்லம் நாராயண நம்பூதிரி தலைமையில், அஷ்டதிரவிய கணபதி ஹோமம், 7.30 மணிக்கு, பஞ்ச கவ்ய சுத்தி, மூர்த்தி கலச பூஜைகள், காலை, 9 மணிக்கு, பஞ்ச கவ்ய சுத்த பாராயணம், உச்சி கால பூஜை நடக்கிறது. மாலை, 5.45 மணிக்கு, பெண்கள் மட்டும் பங்கேற்கும் பகவதி சேவை நிகழ்ச்சி, 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு, 8.15 மணிக்கு, அர்த்தஜாம பூஜை நடக்கிறது.