மானாமதுரை: மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா ஜூன் 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ேற்று மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினார். சிறிய தேர்களில் அம்மன், தண்டிகேஸ்வரர் வந்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி செய்திருந்தனர்.