பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
11:06
அல்லாஹ் மீது அபார பக்தி கொண்ட அப்துல்லா, ஒரு பிச்சைக்காரரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், “இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா, நீங்கள் சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,” என்றார். வந்தவர், “ஐயா! இந்த உணவை அளித்தது நீர் தான். கடவுள் அல்ல. உமக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்? நீர் என்ன இறைவனை பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டு விட்டார்.அப்துல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. “இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமையில்லாதவர்,” என்று கூறவே, பெரியவர் கோபமாக எழுந்து போய்விட்டார். அன்றிரவு அப்துல்லாவின் கனவில் இறைவன், “ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால் நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,” என்றார். அப்துல்லா திடுக்கிட்டு எழுந்தார். எல்லாம் வல்ல இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி.