பதிவு செய்த நாள்
12
செப்
2011
10:09
கடலூர்: கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், நேற்று 132 திருமணங்கள் நடந்தன. திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், முகூர்த்த நாளில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்தும், ஏராளமா@னார் வேண்டுதல் மற்றும் சிக்கன நடவடிக்கையின் பேரில் திருமணம் செய்து கொள்வது வழக்கம். நேற்று, கோவில் உள்ளே 105 திருமணங்கள், வெளியே உள்ள மண்டபங்களில், 27 திருமணங்கள் என, மொத்தம் 132 திருமணங்கள் நடந்தன. இதனால், திருமண ஜோடிகளின் உறவினர்கள் நண்பர்கள் என, அதிகளவில் கோவிலில் குவிந்தனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். பஸ்,ஷேர் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களை, கோவில் அருகே அனுமதிக்கவில்லை. பஸ்கள் மெயின் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன. பல்லாயிரக் கணக்கானோர் குவிந்ததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வெகுநேரமானது.