நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2016 12:06
நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் புதியதாக வரசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் கோ பூஜை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை முடிந்து, கடம் புறப்பாடாகி, காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.