பதிவு செய்த நாள்
27
ஜூன்
2016
12:06
ஆர்.கே.பேட்டை: அக்னி வசந்த உற்சவத்தின் நிறைவாக, நேற்று காலை, துரியோதனன் படுகளமும், மாலையில் அக்னி பிரவேசமும் நடைபெற்றன. பள்ளிப்பட்டு அடுத்த, வடகுப்பம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த, 16ம் தேதி, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சி யுடன் தீமிதி திருவிழா துவங்கியது. நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தெருக்கூத்து கலைஞர்கள், 18ம் நாள் குருஷேத்திர போர்க்கள நிகழ்வை நடத்தினர். மாலை, 6:00 மணிக்கு, அக்னி பிரவேசம் நடந்தது. கோவில் முன்பாக மூட்டப்பட்ட, அக்னி குண்டத்தில் இறங்கி, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.