Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாள் ... தஞ்சை பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி துவக்கம்! தஞ்சை பெரியகோவிலில் வராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2016
11:07

புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில், ஆனி மாத அமாவாசையான நேற்று, உலக நன்மை வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது.  புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 72 அடி  உயர மகா   பிரத்தியங்கிரா காளி கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை மற்றும்  தேய்பிறை   அஷ்டமி தினத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, மிளகாய் வற்றல் கொண்டு  நடத்தப்படும் நிகும்பலா யாகம்   சிறப்பு வாய்ந்தது.  இந்த யாகத்தில் பங்கேற்று அம்பாளை தரிசித்தால் சகல   நன்மைகள் கிடைக்கும், எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்பது ஐதீகம். அந்த  வகையில்,  ஆனி மாத அமாவாசை தினமான நேற்று, நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. அதையொட்டி, காலை 9.00  மணிக்கு பிரத்தியங்கிரா காளிக்கு,  சிறப்பு  அபிஷேக  ஆராதனைகள் நடந்தது. 1008 எலுமிச்சை பழங்கள் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை தொடங்கி யது. பகல் 1:00 மணிக்கு கோவில் குருக்கள் நடாதுார் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில்,   வேத மந்திரங்கள் ஓத,  யாக குண்டத்தில் மிளகாய்  வற்றல், இனிப்பு,  காய்கறிகள்,  பழங்கள் கொட்டி யாகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் பணிகள் ... மேலும்
 
temple news
எஸ்.புதுார்: எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் தைப் பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
செய்யூர்: கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், 50ம் ஆண்டு தைப்பூச தெப்ப உத்சவ விழா விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், தைப்பூச தெப்போத்சவம் கண்டார்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar